தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி நியூரோ எண்டோவாஸ்குலர் இன்டர்வென்ஷன் கான்கிளேவ் 2024 என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துகிறது. இரத்த நாள அழற்சி, தமனி குறைபாடு மற்றும் பக்கவாதம் போன்ற மூளை மற்றும் முதுகுத்தண்டை பாதிக்கிற இரத்தநாள பாதிப்புகளுக்கான சிகிச்சையில் மேம்பட்ட உத்திகள் மீது அறிவையும், திறன்களையும் இளம் நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கும், நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுநிலை பட்டதாரிகளுக்கும் வழங்குவதே 3 நாட்கள் நிகழ்வாக நடைபெறுகிற நோக்கமாகும். தென்தமிழ்நாட்டில் முதலாவது கேத் லேப் என புகழ்பெற்றிருக்கும் இம்மருத்துவமனையின் பைப்ளேன் கேத் லேப் குறித்து அக்டோபர் 18 முதல் 20 வரை இந்த கான்கிளேவ் நடத்தப்படுகிறது. நரம்புக்குழாய் பாதிப்புகளைக் கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் இந்த கேத் லேப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கான்க்ளேவில் மருத்துவ நிபுணர்களின் சிறப்புரைகள், நேரடி அறுவைசிகிச்சைகள் மற்றும் பயிற்சி ஆகியவை இடம்பெறும். நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மட்டுமன்றி மூளை நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் கதிர்வீச்சியல் மருத்துவர்களுக்கும் இந்நிகழ்வு பயனுள்ளதாக இருக்கும். MNI கான்கிளேவ் 2024 நிகழ்வின் அமைப்பு குழுவில் மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த திரு.திலீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இண்டெர்வென்ஷனல் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.கௌதம் குஞ்சா இது தொடர்பாக பேசுகையில், மேம்பட்ட நரம்பியல் அறுவைசிகிச்சைகள் மற்றும் இண்டெர்வென்ஷனல் சிகிச்சைகளை மேற்கொள்வதில் அதிக திறந்த வாய்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் திறன்மிக்க நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் கதிர்வீச்சியல் நிபுணர்கள் அடங்கிய அர்ப்பணிப்புமிக்க குழுவை கொண்டிருப்பதில் இம்மருத்துவமனை பெருமை கொள்கிறது இண்டெர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் முகுந்தராஜன்
பேசுகையில், “மூளை மற்றும் முதுகுத்தண்டை பாதிக்கும் நுட்பமான இரத்தநாள பாதிப்புகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை விளைவுகளை மேம்படுத்த சிறப்பான உட்கட்டமைப்பு வசதி அவசியம். மிக நவீன நரம்பியல் செயல்முறைகளில் நேரடி பயிற்சியை வழங்கவும், நேரலையாக சிகிச்சை நிகழ்வுகளின் செய்முறை விளக்கங்களை நடத்தவும் தேவைப்படும் வசதிகள் அனைத்தும் எமது மருத்துவமனையில் இருப்பது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும் என்றார். நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். செல்வமுத்துகுமரன் பேசுகையில், “உள்ளார்ந்த இரத்தக் கசிவிற்கு வழிவகுக்கிறவாறு இரத்த நாளங்களில் உருவாகும் வீக்கங்கள் போன்ற இரத்தநாள அழற்சிகள் மூளையையும், முதுகுத்தண்டையும் பாதிக்கின்றன. இந்த இரத்தநாள பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கிற மூளை நரம்பியல் இண்டெர்வென்ஷனல் சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றன என்றார். நரம்பியல் சார்ந்த இரத்தநாள சிகிச்சையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாக இந்த கான்கிளேவ் இருக்கிறது என்று நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். செந்தில்குமார் கூறினார் . “பங்கேற்பாளர்களுக்கு சிறப்புரை வழங்க 10 நிபுணர்களை நாங்கள் அழைத்திருக்கிறோம். சவால்மிக்க நேரடி சிகிச்சை மீதான செய்முறை விளக்கங்களின் வழியாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும். இரத்தநாள அழற்சிக்கான சிகிச்சையில் காய்லிங் என்பது மிகக் குறைந்த ஊடுருவலுள்ள ஒரு மருத்துவ செயல்முறையாகும். இதிலும் மற்றும் ஸ்டெண்ட் பொருத்துவதிலும், இரத்த. நாளங்களிலிருந்து இரத்த உறைகட்டிகளை அகற்றுவதில் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையான மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி என்பவை மீதும் நேரடி செய்முறை விளக்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். இத்துறை நிபுணர்களோடு சவால்மிக்க சிகிச்சை நேர்வுகள் குறித்து விவாதிக்கவும் மற்றும் புதிதாக பயன்படுத்தப்படுகிற மூளை-நரம்பியல் இண்டெர்வென்ஷனல் சிகிச்சைகள் மீது சிறந்த தகவல்களை பெறவும் பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்று அவர் விளக்கமளித்தார்.