ஈரோடு டிச.3
ஈரோடு கோட்டை பகுதி யில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது . இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை யொட்டி வாரந்தோறும் திங்கள் கிழமை சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. கடந்த வாரம் 108 சங்கரபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து உலக நன்மைவேண்டி ருத்ரயாகம் நடந்தன. இதில் 12 ருத்ரர்களை நினைவு கூறும் வகையில் 1 1
கலசங்கள் மலர்களால் அலங்கரித்து யாக சாலையில் வைக்கப்பட்டது. அங்கு 2 காலயாக பூஜை நடத்தப்பட்டது. ஆருத்ர இதன்பிறகு கபாலீஸ்வரருக்கு 16 வகையான திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட 11 கலசங்கள்
மூலமாக ஈஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ருத்ரயாக அபிஷேகத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர் . யாகத்தில் பங்கேற்ற அவர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆருத்ர கபாலீஸ்வரரை தரிசனம் செய்தனர். மாலையில் பஞ்ச பிரகார நிகழ்ச்சி நடந்தது. இதில் வாருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வ ரர் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை 5 முறை சுற்றி வந்தார்.அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.