தென்தாமரைகுளம்.,பிப். 02.
தென்தாமரைகுளம் பேரூராட்சி க்குட்பட்ட 11-வது வார்டு தேங்காய்காரன் குடியிருப்பு முருகன் கோவில் பின்புறமுள்ள சாலையில் பொதுநிதி திட்டம் மூலம் ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென் தாமரை குளம் பேராட்சித் தலைவர் கார்த்திகா பிரதாப் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் பாமா ஜெகநாதன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் தாமரை பிரதாப், செல்வசாம் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.