திருப்பூர்பிப்:8
மாநகராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் 3 மற்றும் 4-மண்டலத்தில் ரூ.5.97 கோடி மதிப்பீட்டில் புதிய 4443 எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் மேயர் ந. தினேஷ்குமார்
தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது.
அந்த வகையில் முதல் கட்டமாக கோவில்வழி பேருந்து நிலையம் முதல் பொல்லிகாளிபாளையம் வரை ரூ.69.89 இலட்சம் மதிப்பீட்டில் மையத்தடுப்பு எல்.இ.டி. 120 வாட்ஸ் விளக்குகள் 162 கம்பம் அமைத்து பொருத்தப்பட்டுள்ளது. உயர் மின்கோபுர எல்.இ.டி. விளக்குகள் மூன்று இடங்களில் (பொல்லிக்காளிபாளையம், கருப்பராயன்கோவில் மற்றும் பொன்கோவில்நகர்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்பரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 2-ம் மண்டலத்தலைவர் கோவிந்தராஜ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொ) செல்வநாயம், உதவி பொறியாளர்கள் ஆறுமுகம், சுப்பரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.