பூதப்பாண்டி டிச 4
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூதப்பாண்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் பல்வேறு திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, பூதப்பாண்டி பேரூராட்சி துவரங்காடு 9-வது வார்டு கீழத்தெரு பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்க வேண்டியும், 14-வது வார்டு சோழவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோவில் தெருவில் தடுப்புசுவர் மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்க வேண்டியும், மார்த்தால் அசிசி ஸ்கூல் முதல் அனந்தன் ஆறு படித்துறை வரை அலங்கார தரைகற்கள் அமைக்க வேண்டியும் பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். எனவே கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025-ம் ஆண்டு நிதியிலிருந்து துவரங்காடு 9-வது வார்டு கீழத்தெரு பகுதியில் காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 10 இலட்சமும், 14-வது வார்டு சோழவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோவில் தெருவில் தடுப்புசுவர் மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்க ரூ. 6 இலட்சமும், 1-வது வார்டு மார்த்தால் அசிசி ஸ்கூல் முதல் அனந்தன் ஆறு படித்துறை வரை அலங்கார தரைகற்கள் அமைக்க ரூ. 10 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 26 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
இதற்கான பணிகளை நேற்று தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவர் ஆலிவர்தாஸ், வார்டு உறுப்பினர்கள் முருகன்பிள்ளை, உஷாபகவதி, மரிய அற்புதம், தலைமை கழகப் பேச்சாளர் ஜீவாகணேசன், பூதப்பாண்டி பேரூர் கழகச் செயலாளர் எபிஜாண்சன், பேரூர் கழக அவைத்தலைவர் முஸ்தப்பா, மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ரபி மற்றும் துவரங்காடு ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.