கருங்கல், நவ- 29
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏ – யுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கடந்த 7 – 5 – 2022 – அன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலவர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான மிக முக்கிய திட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் 79 -கடலோர குடியிருப்புகளுக்கான 17 -பேரூராட்சிகள் மற்றும் 19 -வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, விளாத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்காக சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2006 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக விளாத்துறை பகுதியில் இருந்து கோவளம் வரை 60 – கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் பரசேரி – திங்கள்நகர் – புதுக்கடை (SH91) மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுகுடிநீர் திட்ட காங்கிரீட் குழாய்களால் அதிகமான இடங்களில் ராட்சத காங்கிரீட் குழாய்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் காப்பிக்காடு முதல் திங்கள் நகர் வரை சுமார் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக DI பைப்புகளை சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.
இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது உங்கள் கீழ் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை 9.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே பாதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத காங்கிரீட் குழாய்களை மாற்றி DI பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க ரூ. 26 கோடியே 68 லட்சம் ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் கடந்த 22-11-2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.