நாகர்கோவில் டிச 5
இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் பால்கிணற்றான் விளையில் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் அருகே பல்நோக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்றும், காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தர வேண்டுமென்றும், காற்றாடிதட்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் முன்பு புதிய கலையரங்கம் அமைத்து தர வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ. 10 இலட்சமும், காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ஸமார்ட் வகுப்பறை அமைக்க ரூ. 2 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் முன்பு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 7.50 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ. 2 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையினை தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
மேலும் தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் புனிதா கலையரசன், வார்டு உறுப்பினர் செல்லபெருமாள், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி பொறுப்பாளர் முருகன், கழக நிர்வாகிகள் சுகுமாரன், அக்சயாகண்ணன், ரபீக், ஊர்த்தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.