புதுக்கடை, ஜன- 26
புதுக்கடை பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி | உள்ளது.இந்த வங்கியின் கிளை மேலாளராக கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாகர்கோவில் வடக்கு சற்குண வீதியை சேர்ந்த காட்ரோ (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினர் ஒருவருக்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள அதே வங்கிகளில் கணக்கு இருந்துள்ளது. அந்த கணக்கில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை வாய்ப்புத் தொகையாக இருந்துள்ளது.
அந்த வைப்புத் தொகையை பயன்படுத்தி காட்ரோ தனது உறவினரின் வங்கி கணக்கு மூலம் கடன் தொகை பெற முடிவு செய்து, அதன்படி உறவினர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதுபோல் போலியாக கையெழுத்து விட்டு விண்ணப்பித்து, அதன் மூலம் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் வரை நேர்மையற்ற முறையில் வங்கியை ஏமாற்றி பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.
காட்ரோவின் இந்த மோசடியை வங்கி உயர் அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் நாகர்கோவில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தர். போலீசார் விசாரணை நடத்தி காட்ரோ மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.