திண்டுக்கல் அக்டோபர் 20,
ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000 மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் குயின் சிட்டி இணைந்து நடத்திய வெற்றி வாகை பப்ளிக் இமேஜ் செமினார் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ரோட்டரி இன்டர்நேஷனல்2025-27 இயக்குனர் மற்றும் எக்ஸெல் குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மன் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஈவன்ட் மேனேஜர் சித்ரா ரமேஷ் முதன்மை வகித்தார். டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி ஈவென்ட் சரவணன், டிஸ்ட்ரிக்ட் செகண்ட் பப்ளிக் இமேஜ் மோகன்குமார், செக்ரட்டரி கோகிலா, ட்ரசரர் யுவசாரதா, கிளப் பிரசிடெண்ட் கவிதா மற்றும் கிளப் செகரட்டரி பார்கவி ஆகியோர் இணைந்து இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.மேலும் ரோட்டரி பப்ளிக் இமேஜ் பாடினேட்டர் ரமேஷ்பாபு மற்றும் அசிஸ்டன்ட் ரீஜனல் குவாடினேட்டர் ஜெரால்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவினை சிறப்பித்தனர்.சுமார் 600க்கும் மேற்பட்ட ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.