களியக்காவிளை, மார்-8
அதங்கோடு, ஆனந்த நகர் மாயா கிருஷ்ண சுவாமி கோயில் 100-வது வருட ரோகிணி திருவிழாவும், இந்து சமய மாநாடும் 6-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முதல் நாள் காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, திருக்கொடியேற்று ஸ்ரீமத் பாகவத சப்தாக யக்ஞம் துவக்க விழா, சுவாமி கிருஷ்ண வாகனத்தில் வார்டு ஊர்வலம் மாலை மாபெரும் இலட்ச தீபம் நடந்தது. மாபெரும் இலட்ச தீபங்கள் ஏற்றும் துவக்க விழா நிகழ்ச்சியாக முதல் தீபம் மதுரை ஆதீனம் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிஷ்ச்சியில் கோயில் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். நாடார் மஹாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார். சென்னை மோகனேந்திரன், பா.ஜ.க குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், பேசினர்.
இந்த நிகச்சியில் பாஜ.க முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செயசீலன், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.