சென்னை, டிச-16, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான எல்லைகளை விரிவு படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி மாணவர்களுக்கான வழிகாட்டுத் திட்டம் 2024 என்னும் நிகழ்வு சென்னை
முகப்பேர் கிழக்கு டி .எஸ். கிருஷ்ணா நகரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் உயர்கல்வி மாணவர்களுக்கான வழிகாட்டுத் திட்டம் 2024 என்னும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் நிகழ்வாகும்.
நிகழ்ச்சியில் முதன்மை முதல்வர் பொன்மதி மற்றும் முதல்வர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
சிறந்த பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் பங்கு கொண்ட 40 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஒவ்வொரு அரங்கிலும் உயர்கல்வி தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஐயம் குறித்து விளக்கம் தரப்பட்டது . மேலும் விரிவான வழிகாட்டு அறிக்கை பிரதிகள்மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி கடன்கள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
வேலம்மாள் கல்வி நிறுவனம் நடத்தும் இந்நிகழ்வு மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.