கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 13
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு அருகில் பராமரிப்பு செய்யப்பட்டு வரும் இதர மாவட்ட சாலையான நாகை – கூடலூர் – மைசூர் சாலை கி.மீ 192/6 -லிரருந்து பிரியும் மேட்டுத் திருக்காம்புலியூர் சாலையில் லாட சன்னாசி கோவில் அருகில் 0/6 ல் பால வேலை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியும் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து லாட சன்னாசி கோவிலின் அருகில் பொதுமக்களின் நலன் கருதி புதிதாக வேகத்தடை அமைக்கும் பணியும் முடிவுற்றது. அதனை கோட்டப் பொறியாளர் (நெ) க(ம) ப கரூர் ஆர். ரவிக்குமார், உதவிக் கோட்டப் பொறியாளர் M. ஆனந்தகுமார் மற்றும் உதவிப் பொறியாளர் A.A.அசாருதீன் கிருஷ்ணராய (நெ)க(ம)ப ஆகியோர் ஆய்வு செய்து வேகத்தடைக்கு வர்ணம் பூசுமாறு அறிவுறித்தியதன் பேரில்,ம.சோ.சுகுமார் திறன்மிகு உதவியாளர், கிருஷ்ணராயபுரம் (நெ)க(ம)ப அவர்களின் மேற்பார்வையில் வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.