ராமநாதபுரம், ஜன.23-
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமையேற்று நெடுஞ்சாலை துறையின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கூட்டம் சார்பாக 2025 ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெற்று வருகிறது. அதனை எப்படி இன்று இரு சக்கர வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் என 250 பேர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகனம் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து பயன் வரும் வகையில் சாலை பாதுகாப்பினை அவசியம் குறித்தும் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் மிக முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் குமரய்யா கோயில் பாரதி நகர் டி பிளாக் வழியாக கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.