நாகர்கோவில் அக் 19
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள்
மத்தியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இதில் சுமார் 600 பள்ளி மாணவிகள்,15 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நடைபெற்று விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில்
பள்ளி மாணவிகளுக்கு சாலை குறியீடுகள், போக்குவரத்து விதிகள், சமிக்ஞைகள், மற்றும் விபத்துகள் குறித்த வீடியோக்கள் காண்பிக்கப்பட்டு வாகன ஓட்டுநர்கள் செய்யும் தவறுகள் சுட்டி காட்டப்பட்டு விளக்கப்பட்டது.