மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு படி போக்குவரத்து பிரிவு சார்பாக சாலை விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான (BLACK SPOTS AND HOTSPOTS) விபத்து பகுதிகளை கண்டறிதல், ஆய்வு செய்தல் மற்றும் அதனை சீரமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் “சாலை பாதுகாப்பு மாதம் 2025” காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தமுக்கம் சந்திப்பில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு. போக்குவரத்து. ஆயுதப்படை, ஊர் காவல்படை காவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். மேற்படி இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி, கோரிப்பாளையம் AV BRIDGE மாசி வீதிகள் வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. முன்னதாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சென்ற பொதுமக்களுக்கு தமுக்கம் சந்திப்பில் இனிப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவல் ஆணையர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை ஆணையர் போக்குவரத்து, காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் உதவி ஆணையர்கள் நகர், தல்லாகுளம் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். காவல் ஆணையர் மதுரை மாநகரில் இதுவரையில் 76 இடங்கள் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் ZIG- ZAG பேரிக்காடுகள் அமைத்தல், சாலைகளில் வர்ணம் பூசுதல், ஒரு வழி பாதை அமைத்தல். ஒளிரும் விளக்குகளை வைத்தல், வேகக்கட்டுப்பாடு மற்றும் சாலை குறியீடுகளை அமைத்தல், அங்குள்ள சாலை அமைப்புகளை மாற்றி அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மதுரை மாநகரில முந்தைய ஆண்டினை காட்டிலும் கடந்த 2024-ஆம் ஆண்டில் 26 இறப்பு வழக்குகளும் 88 காய வழக்குகளும் மொத்தம் 114 விபத்துகள் என குறைந்துள்ளன. இது சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் 15% குறைவாகும். மேலும் கடந்த 2024- ம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களின் மீது 4,85,023 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களின் மீதான ஆய்வில் மதுரை மாநகரில் பாதசாரிகள் 40%- ம் இரு சக்கர வாகனங்களில் 56.5%-ம் என அதிகமாக விபத்துக்குள்ளாகி உள்ளனர். பாதசாரிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க, சாலையின் மைய்யப்பகுதியில் காணப்பட்ட 236 இடைவெளிகளை கண்டறிந்து அவை அனைத்து அடைக்கப்பட்டதில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள்.