தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுவையொட்டி டூவீலர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தொடங்கி இப்பேரணி நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. இப்பேரணியை ஏடிஎஸ்பி ஸ்ரிதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், தலை கவசம் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். இப்பேரணியில் தருமபுரி, தொப்பூர், அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
கலந்து கொண்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை செய்து காவல்துறை சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கினர். பின்னர் அவர்களை ஹெல்மெட் அணிய வைத்து பேரணியில் அழைத்துச் சென்றனர். இந்த பேரணியில் டிஎஸ்பி சிவராமன், இன்ஸ்பெக்டர் வேலுதேவன், போக்குவரத்து எஸ்ஐ சின்னசாமி மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.