ஈரோடு ஏப் 5
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள ரோடுகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே இந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ரோடுகள் இப்போது சீரமைக்கப்பட்டு உள்ளது.
அந்தியூர், சத்தியமங்கலம் தாளவாடி வட்டாரங்களில் உள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நபார்டு 2021-22ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டாரத்தில் குத்தியாலத்தூர் மற்றும் சக்கரைப்பள்ளம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் தொகை ரூ.659.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் மாக்கம்பாளையம், கோவிலூர், கூத்தம்பாளையம், கோம்பைதொட்டி, கோம்பையூர் மற்றும் அரிகியம்புதூர் ஆகிய குக்கிராமங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இப்பாலம் அமைந்துள்ளது.
அதேபோல், அந்தியூர் வட்டாரம், பர்கூர் ஊராட்சி, அணைப்போடு குக்கிராமத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன்கீழ் ரூ.108.89 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியின் மூலம் இக்கிராமத்தில் வசிக்கும் 76 மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024-25-ன் கீழ் 2 பணிகள் ரூ.33.06 இலட்சம் மதிப்பீட்டில் தம்முரெட்டி குக்கிராமத்தில் 420 மக்களும், ஒன்னக்கரை கிராமத்தில் 384 மக்களும் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாளவாடி வட்டாரத்தில் பழங்குடியினர் நலத்திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.81.96 இலட்சம் மதிப்பீட்டில் மாவநத்தம் குக்கிராமத்தில் 193 மக்கள் தொகை கொண்ட குக்கிராமத்தில் ஒரு பணியும் மற்றும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2024-25-ன் கீழ் ரூ.291.74 இலட்சம் மதிப்பீட்டில் தம்முரெட்டி, பசப்பன்தொட்டி, பாரதிபுரம், காளிதிம்பம் மற்றும் ராமரணை ஆகிய குக்கிராமங்களின் மக்கள் பயன்பெறும் வகையில் 5 சாலைப்பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2024-25ம் நிதியாண்டில் நபார்டு மற்றும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சியில் 2 சாலைப்பணிகள் ரூ.263.29 இலட்சம் மதிப்பீட்டிலும், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 சாலைப்பணிகள் ரூ.350.78 இலட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றது. மேலும் 2025-26 ம் நிதியாண்டில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஓடமந்தை, இட்டரை, பெஜலட்டி ஆகிய குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2 சாலைப்பணிகள் ரூ.407.70 இலட்சம் மதிப்பீட்டிலும், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்கரை, தாமரைக்கரை, கொங்காடை ஆகிய குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2 சாலைப்பணிகள் ரூ.459.97 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்காணும் இப்பணிகளின் மூலமாக இப்பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் குறித்த நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சென்றடைவதற்கும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் அவசர சிகிச்சைக்காக குறைந்த நேரத்தில் மருத்துவமனை சென்றடைந்து மருத்துவ வசதிகளை பெறவும் பயன்பெறும்.
பழங்குடியினர் சிறப்புத்திட்டம் 2023-24ம் ஆண்டு திட்டத்தின் கீழ் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 4.700கி.மீ நீளத்தில் தொகை ரூ.780.00 இலட்சம் மதிப்பீட்டில் பணியானது முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாமரைக்கரை குக்கிராமத்தில் உள்ள 860 மக்களும், தேவர்மலை குக்கிராமத்தில் 442 மக்களும், ஒந்தனை குக்கிராமத்தில் உள்ள 426 மக்களும், எலச்சிபாளையம் குக்கிராமத்தில் உள்ள 413 மக்களும், மடம் குக்கிராமத்தில் உள்ள 245 மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
தூ.நா.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை 2023-24ம் ஆண்டு திட்டத்தின் கீழ் 2.200 கி.மீ நீளத்தில் தொகை ரூ.136.00 இலட்சம் மதிப்பீட்டில் பணியானது முடிக்கப்பட்டு விலாங்கோம்பை குக்கிராமத்தில் 144 மக்கள் பயன்பெறும் வகையில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 454 மக்கள் தொகை உள்ள சோளகனை வனப்பகுதியில் 9.800 கி.மீ. நீளத்தில் ரூ.1050 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26ம் ஆண்டு கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 4.00 கி.மீ நீளத்தில் ரூ.384.20 இலட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.
2025-26ம் ஆண்டு நிதியாண்டில் தாளவாடி வட்டாரத்தில் ஆசனூர் காவல் நிலையம் மற்றும் கொங்காடை வரையும், சுஜில்கரை கோட்டமாளம் சாலை முதல் செலுமிதொட்டி வரையும் மற்றும் சத்தியமங்கலம் வட்டாரத்தில் குரும்பூர் முதல் மாமரத்தொட்டி வரையும் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ள கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொள்ளி, சுண்டப்பூர், குட்டையூர், வேலம்பட்டி, மல்லியம்மன் துர்க்கம், மாக்கம்பாளையம், மற்றும் கெத்தேசல் ஆகிய குக்கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பொருட்டு வனச்சரக அலுவலரின் அனுமதிக்காக கருத்துருக்கள் இணைய தளம் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டவுடன் இச்சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படும்.
தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சியில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.81.96 இலட்சம் மதிப்பீட்டில் மாவநத்தம் குக்கிராமத்தைச் சேர்ந்த 193 மக்கள் பயன்பெறும் வகையில் சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதை
தொடர்ந்து கிராம மக்கள் நிறைந்த மனதுடன் தெரிவித்ததாவது
மலைப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் எங்களுடைய அவசர மற்றும் அன்றாட தேவைகளுக்கு மலையில் இருந்து கீழே இறங்கி வருவது மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. எங்களின் பல வருட கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாவநத்தம் மலைக்கிராமத்தில் சாலைவசதியினை வழங்கி திறந்து வைத்துள்ளார்கள். இதனால் நாள்தோறும் வேலைக்கு செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. எங்கள் பகுதிக்கு சாலைவசதியினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவநத்தம் கிராமத்தின் சார்பில் நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.
சுகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கலைமணி உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஈரோடு மாவட்டம்.