பிப்:6திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட
சோளிபாளையம் பகுதியில் உள்ள ஆனந்தா அவன்யூவில் வசிக்கும் மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதாள சாக்கடை திட்டம் வேண்டி மூன்றாவது முறையாக திடீர் மறியல் போராட்டம் நடத்தினர் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட சோளி பாளையத்தில் ஆனந்தா அவன் யூ குடியிருப்பு பகுதி உள்ளதால் இதில் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர் இதன் அருகில் காவிலிபாளையம் ராம் நகர் ஐஸ்வர்யா கேட் ஆனந்தா என்க்ளே துளிர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ளன அதில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் ஆனந்தா அவன் யூ பகுதியில் வசிக்கும் மக்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு உறிஞ்சி குழாய் அமைத்துள்ளனர் அந்த உறிஞ்சும் குழாய் 10 நாட்களில் நிரம்பி விடுவதால் தண்ணீர் ஆனது வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் பொதுமக்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.