நாகர்கோவில் – நவ – 26,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஆசாரிபள்ளம் – மேலசங்கரன்குழி செல்லும் அபாய வழைவு சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் சாலை ஓரம் உள்ள பழைய மின் கம்பங்களை மாற்றி புதிதாக மின்கம்பங்கள் அமைப்பதற்க்கு வேண்டி சாலை ஓரம் விபத்துக்கள் ஏற்ப்படும் விதத்தில் புதிய மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் அடுக்கி வைத்துள்ளனர். மிகவும் குறுகலான இந்த சாலையில் காலை , மாலை வேளையில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே முன்னால் செல்லும் வாகனங்களை பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் மீது மோதி அவ்வப்போது பகல் நேரத்தில் கூட தொடர் விபத்துக்கள் அரங்கேறி வருவது குறிப்பிட தக்கது. மேலும் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயலும் போது பெரும் விபத்துக்கள் ஏற்ப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரவாரியம் மேலும் தொடர் விபத்துக்கள் ஏற்ப்படும் முன்பு பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல்
சாலையில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.