இராமநாதபுரம் பிப்.16
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள மொத்த குப்பைகளை நெல்மடூர் பஞ்சாயத்து இந்திராநகர் காலனி பகுதியில் கொட்டபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு அமைத்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் செல்லும் வைகை ஒடைகரையில் குப்பைகளை கொட்டுவதாலும், தீ வைத்து எரிப்பதாலும் இங்கு வாழும் பொது மக்கள் தங்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர், மற்றும் சுகாதர சீர்கேடு, தொற்று நோய் போன்ற பல இன்னல்கலுக்கு உட்பட்டு வருகிறார்கள், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும் மற்றும் முதல்வர் வரைக்கும் கோரிக்கை மனு அனுப்பியதாகவும் தெரிவித்தனர் இருப்பினும் இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் மனு செய்தும் அதற்கான பதிலும் முறையாக கிடைக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடம் தெரிவித்தனர். அதுமட்டும் இன்றி தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதகவும் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்க வருகிறது இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. இது போன்று பல இடங்களில் தொடர்ந்து நடைபெறுவதால் இதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.