திருப்புவனம் செப்:30
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் அப்பகுதி மக்கள் மணல்மேடு கிராமத்தில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக் கோரி பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்
கால்வாயில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால்
டெங்கு மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
சாக்கடையில் இருந்து வரும் துர்நாற்றத்தினால் சிறியவர் முதல் முதியவர்கள் வரை சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று
அரசு துறை அதிகாரிகளுக்கு
பெத்தானேந்தல் ஊராட்சி மற்றும் மணல்மேடு கிராமப் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.