நாகர்கோவில் பிப் 26
கேரளா பதிவன் கொண்ட சுற்றுலா பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்றும் அனைத்து வகையான சுற்றுலா சவாரிகளை எடுத்து வருவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஆணை பிறப்பித்த எங்களது குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர், ஸ்டாலின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர் சசி ஆகியோருக்கு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் அதன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் நன்றியை தெரிவித்தார்.