மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரை படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஃபெஞ்சல் புயலினால் பெய்த மிக கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அதனடிப்படையில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் கல்விசான்று, குடும்பஅட்டை, வீட்டுமனை பட்டா, ஆதார், பட்டா உள்ளிட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் இழந்த மக்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 77 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மழையின் போது வீடு இழந்த மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு புதிய இடம் கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளையும் அரசு ஆணை எண் 53 ன் கீழ் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. களர்பதி சமத்துவபுரத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடித்திட வடிக்கால் வசதி அமைக்கப்படவுள்ளது. ஊத்தங்கரை காமராஜர் நகர் பகுதியில் மழை நீர் தேங்காமல்இருப்பதற்கும், மாரம்பட்டி பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கும் தேசிய நெஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை பகுதியில் நேருநகர், அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தகுதியான மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பழுதடைந்த பிரிட்ஜ், வாசிஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி மற்றும் டி.வி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்க 9 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 222 நபர்களுக்கு பொருட்கள் சரிசெய்து தரப்பட்டுள்து.
சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற 255 மருத்துவ முகாமில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை சார்பாக 13 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 621 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் அவற்றில் பயனடைந்தோரின் எண்ணிக்கை, வீடுகள் மற்றும் கால்நடைகள் இழந்த மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 6T601 மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தெரிவித்தார்.
இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) .பி.புஷ்பா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.