நாகர்கோவில் ஜூன் 12
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம். தோவாளை, கல்குளம். விளவங்கோடு. திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் நேற்று முதல் 14.06.2024 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் குறுவட்டத்திற்குட்பட்ட தேரேகால்புதூர் கிராமம். நாகர்கோவில் வடக்கு நகரம், நாகர்கோவில் தெற்கு நகரம், வேம்பனூர் மேற்கு கிராமம். வேம்பனூர் கிழக்கு கிராமம், வடிவீஸ்வரம் கிழக்கு நகரம், வடிவீஸ்வரம் வடக்கு நகரம், வடிவீஸ்வரம் தெற்கு நகரம். வடசேரி கிழக்கு நகரம். வடசேரி மேற்கு நகரம், வடசேரி தெற்கு நகரம். கணியாகுளம் கிராமம், புத்தேரி கிராமம், நீண்டகரை A மேற்கு கிராமம், நீண்டகரை கிழக்கு ஆகிய 15 கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து வருவாய் கோட்டாட்சியர் நாகர்கோவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 5 மனுக்களும், வட்டாட்சியர்/ நிலஅளவை குறித்து 56 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 மனுக்களும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 2 மனுக்களும், மாநகராட்சி 1 மனுக்களும், தேசிய நெடுஞ்சாலை குறித்து 1 மனுக்களும், துணை இயக்குநர் சுகாதாரத்துறை குறித்து 1 மனுக்களும், உதவி இயக்குநர், ஊாட்சிகள் குறித்து 03 மனுக்களும், கல்வித்துறை குறித்து 1 மனுக்களும் என 76 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்களில் உடனடி நடவடிக்கையாக 1 நபருக்கு நிலஅளவை வரைபடம் மற்றும் 1 நபருக்கு கூட்டு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு. மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.