தென்தாமரைகுளம்.,டிச. 8.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 95 ஆயிரம் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வாழ்வாதரரம் மேம்பட அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னும் கோர்ட் உத்தரவை மதிக்காமல் 9 வருடமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிற அகவிலைப்படியை தமிழக அரசு உடனே வழங்க வலியுறுத்தியும், 31-4-2023 முதல் 30-11-2024 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்களை உடனே வழங்க வேண்டியும். 15.ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்து அமுல்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
கோர்ட் உத்தரவை அமல்படுத்தி உடனே அகவிலைப்படியை வழங்கவில்லை என்றால் விரைவில் அனைத்து ஓய்வுபெற்ற சங்கங்களும் ஒன்றிணைந்து சென்னையில் மாபெரும் தர்னா போராட்டம் நடத்துவதென்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.