கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி ஊராட்சியில் காந்திஜெயந்திதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அத்திப்பாடி ஊராட்சியில் 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன இப்பகுதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர் இதில் சாமாட்சிஅம்மன் குட்டை என பெயரிடப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட வருடங்களாக நீர் தேக்க நிலையாக இருந்து வருகிறது இப்பகுதிக்கு 1972 ஆம் ஆண்டு இக்குட்டைக்கு பட்டா வழங்க தனி நபர் கோரியுள்ளார் பட்டாவுக்கு விண்ணப்பத்தவர் இவ் ஊராட்சியை சார்ந்தவர் இல்லை என்பதாலும் அவருக்கு ஏற்கனவே பல ஏக்கர் நிலம் இருப்பதாலும் பட்டா கேட்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி என்பதாலும் அவர் விண்ணப்பித்த பட்டாவிற்கு ஊராட்சி நிர்வாகத்தாலும் கிராம நிர்வாக அதிகாரியாலும் நிராகரிக்கப்பட்டது. இது நடைபெற்று 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதன் பின்னர் இருமுறை குட்டைப் பகுதிக்கு ஊரக வளர்ச்சித் துறையால் தூர்வாரப்பட்டு செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தது இதன் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தாலும் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு அளிக்கப்பட்டது முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளித்ததால் இதனை விசாரித்த வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார் தற்போது இக்குட்டைக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரையும் வட்டாட்சியர் இடத்திலும் மனு அளித்ததன் பெயரில் உடனடியாக பரிந்துரை செய்த வட்டாட்சியர் கோட்டாட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தார் அங்கு பொதுமக்கள் இது நீர்த்தேக்க பகுதி என்றும் இது பல ஆண்டுகளாக குட்டையாக இருப்பதாகவும் கோட்டாட்சியரிடம் எதிர்பு தெரிவித்தனர்.
ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமாட்சியம்மன் குட்டைக்கு எந்த ஒரு தனி நபருக்கும் பட்டா வழங்கக் கூடாது எனவும் இது ஆண்டாண்டு காலமாக நீர்நிலைப் பகுதியாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்வதாகவும் பட்டா வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கூறினர் இதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் தீர்மான நகலை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது கிராம ஊராட்சிகளின் கடைசி கிராம சபா கூட்டம் என்பதால் ஊராட்சி மன்ற தலைவர் சுதா குமார் அவர்களுக்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டதாகவும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள்.