நாகர்கோவில் அக் 28
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் வாசிக்க பட்டன. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத்தலைவரும், கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பின் துணை அமைப்பாளருமான முத்துக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநில மாநாட்டில் கொள்கை திட்டங்களை அறிவிக்கும் போது,” குமரி மாவட்டத்தில் தாது மணல் மற்றும் கனிம வளங்களை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும்” என்று கொள்கை செயல் திட்டத்தை அறிவித்துள்ளார். இதனை அகில இந்திய தமிழர் கழகமும், மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பும் மனப்பூர்வமாக வரவேற்கிறது.
அதே நேரத்தில் தாங்கள் இந்த அறிவிப்பை இத்தோடு நிறுத்தி விடாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்விடத்தையும் பாதுகாக்கும் வகையிலும், விவசாயத்தை பாதுகாத்திடும் வகையிலும், கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கி போராட முன் வர வேண்டும். மக்களை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.