நாகர்கோவில் மே 18
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்ச்சி காரணமாக மாவட்டத்தில் மிதமான மலையும் சில பகுதிகளில் கனமான மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாகர்கோவில் பார்வதி புரம் தக்கலை பூதப்பாண்டி ஆரல்வாய்மொழி உட்பட மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன்அணை, முக்கடல் உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், ஆறுகாணி, கடையாலுமூடு, அருமனை, பனச்சமூடு, திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.இதனால், கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் நாகர்கோவில் பாதாள சாக்கடைகளுக்கு தோண்டப்பட்ட குழிகளும் தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அந்த குழிகளை மூடவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிகாகை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics