தக்கலை, அக் – 13
அழகியமண்டபம் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். சம்பவ தினம் விடைத்தாளை மாணவரிடம் கொடுத்த ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் மறுநாள் பள்ளி செல்லாமல் இரணியல் ரயில் நிலையத்துக்கு சென்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த மாணவன் எங்கு செல்வது என தெரியாமல் அங்குள்ள ஒரு கோயில் அருகில் நின்று கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் விசாரித்த போது மாணவன் சமாளித்ததாக தெரிகிறது. அப்போது உன் பெற்றோருக்கு செல்போனில் பேசு என்று அவரது செல்போனை கொடுத்துள்ளார். ஆனால் மாணவன் பெற்றோருக்கு செல்போன் பேசுமறுத்து அவர் அண்ணன் முறையான மார்த்தாண்டத்தில் உள்ளவருக்கு பேசியுள்ளார்.
இதையடுத்து மாணவர் மறுபடியும் ரயில் ஏறி மார்த்தாண்டம் வந்து விட்டார். அங்கு இறங்கிய மாணவன் தன் செல்போனில் பேசி அண்ணன் வீடு சென்றார். இதையடுத்து உறவினர்கள் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மாணவனை ஆஜர் படுத்தி அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.