தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!
தேனி மாவட்டம், அக்டோ – 16
தேனி மாவட்டம் , குமுளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் மாரியப்பன் சர்வதேச அளவில் நடைபெற்ற மாஸ்டர் கேம் போட்டிகளில் பங்கெடுத்து பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள நிலையில், அடுத்து சீனாவில் நடைபெறும் 2025 வேர்ல்ட் மாஸ்டர் கேம்ஸ்-ல் கலந்து கொள்ள இருக்கிறார்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் தமிழ்நாடு காவல்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் தற்போது குமுளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் உத்தம பாளையத்தில் மனைவி அபிநயா மற்றும் 11ஆவது படிக்கும் மகன் பத்தாவது படிக்கும் மகளுடன் குடியிருந்து வருகிறார் இயற்கையிலேயே விளையாட்டு துறையில் ஆர்வமுடைய மாரியப்பன் அவ்வப்போது தமிழக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு திருச்சியில் 35 கிலோ எடையை பற்களில் 60 வினாடிகள் கடித்துத் தூக்கி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சென்னையில் அகில இந்திய காவலர்களுக்கு இடையான போட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முன்னிலையில் 60 கிலோ எடையை பற்களால் கடித்து தூக்கி சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை பாராட்டி அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ரூபாய் 5000 ரொக்கப்பணம் கொடுத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் 2009, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மேற்கண்ட பற்களால் எடைத்துக்கும் போட்டியில் பங்கெடுத்து சாதனைகளை படைத்துள்ளார்
2022 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நான்காவது நேஷனல் மாஸ்டர் கேம் ஸ் – ல் மூன்று போட்டிகளில் பங்கெடுத்து அதற்காக பதக்கங்களை வென்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற 71 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு கொண்ட ஆசியன் பசிபிக் கேம்ஸ் – ல் ஹாமர் த்ரோன் என்ற வட்டு எறிதல் விளையாட்டில் சில்வர் மெடல் வாங்கி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்
விளையாட்டுத் துறை மட்டுமல்லாது தான் பணியாற்றும் காவல்துறையிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக 2024-ம் ஆண்டுக்கான முதல்வர் விருதை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெற்றார் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மாரியப்பனை பாராட்டி கௌரவித்தனர்
குண்டு எறிதல், வட்டுஎறிதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி அதற்கான பயிற்சிகளை காவல்துறை பணிகளுக்கு இடையே மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெறும் நாட்களுக்கு முன்பாக கடினமான தொடர் பயிற்சியில் ஈடுபட்டும் வருகிறார் தமது காவல்துறை பணியோடு
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தைபே சிட்டியில் நடைபெறவிருக்கும் வேர்ல்ட் மாஸ்டர் கேம்ஸ்-ல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கெடுக்கும் இப்போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் குண்டு எறிதல் வட்டு எறிதல் சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தனது பெயரை பதிந்துள்ளார் காவலர் பணிகளுக்கிடையே தான் பணியாற்றும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் மாரியப்பன் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து நம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் அவரை தமிழக அரசு அனைத்து ரீதியிலும் ஊக்கப்படுத்தி உரிய உதவிகள் செய்திட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்