சங்கரன்கோவில்.ஜூலை.31.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார் மனுவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல நீலிதநல்லூர் ஒன்றியம் ரெங்க சமுத்திரம் கிராமத்தைச் சுற்றி உள்ள வடக்கு அழகு நாச்சியாபுரம், கிழக்கு அழகு நாச்சியாபுரம், தோனுகால், மீன்துள்ளி ,மலையான்குளம், கருத்தானூர், ரெக்கையாபுரம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ ,மாணவிகளின் நலனை முன்னிட்டு ரெங்க சமுத்திரத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதி அமைத்து தர வேண்டும் எனவும், இதனை அமைத்துக் கொடுத்தால் மாணவ ,மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயில ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் . இந்த சந்திப்பின்போது வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைகுமார் மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை ஆகியோர் உடன் இருந்தனர்