புதுக்கோட்டை மாவட்டம் தமாகா மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது. கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சியில் முதன் முதலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு துவார் கீழப்பட்டி கல்லுப்பட்டி தெருக்களுக்கு சுமார் 250 குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பில்லர் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது இது சம்பந்தமாக கந்தர்வகோட்டை வட்டார வளர்சி அலுவலர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த ஆறு மாதமாக எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் அதன் அருகில் அரசு உயர் நிலைப்பள்ளியும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமும் வணிக வளாகமும் உள்ளது. கிராம நிர்வாக அலுவலரை பார்க்க தினந்தோறும் ஊர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர் அவ்வாறு அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது இதை ஒன்றிய நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை எனவே தாங்கள் சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.