தேனி நவ 9:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சி இங்கு பேரூராட்சி மன்ற தலைவராக பால் பாண்டி அவர்கள் பேரூராட்சி மன்ற தலைவர் என்ற எந்தவிதமான கர்வம் இல்லாமல் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடம் கனிவுடன் பேசி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார் இதேபோல் தூய்மை பணியாளர்களுடன் பருவ மழையின் போது கிராம பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக சாலையில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பேரிடர் மீட்பு பொருள்களை முன்பே கொண்டு வந்து மழைக்காலங்களில் தொடர்ந்து பணியாற்றி கிராம
தெருக்களில் குப்பைகள் தேங்க விடாமலும் சாக்கடைகளை தேங்க விடாமல் உடனுக்குடன் அகற்றி டவுன் பஞ்சாயத்து மக்கள் சுகாதாரமாக வாழ ஒத்துழைக்க வேண்டும் என்றும் பேரூராட்சி குழாய் இணைப்புகளில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் மழைநீர் வடிகால்கள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தொட்டில்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் குடிநீர் தொட்டிகள் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் துப்புரவு தூய்மை பணியாளர்கள் பொது மக்களுக்கு மேற்கண்ட பணிகளுக்கு முன்னுரிமையாக பணியாற்ற வேண்டும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம் என்பது மிக முக்கியமானது மழைக் காலங்களில் மின்சாரம் சீராக மின்தடை ஏற்படாமல் 24 மணி நேரமும் மின்சாரம் தடங்களின்றி கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவு நீர் கால்வாய்களில் தன்னார்வலர்கள் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பொதுமக்களை அழைத்து பேசி அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் டவுன் பஞ்சாயத்து என்றி ல்லாமல் மாநகருக்கு இணையாக தாமரைகுளம் பேரூர் மக்கள் வாழ வேண்டும் என்று கடுமையாக பாடுபடும் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்
வி.ஷஜுவனா நேரில் அழைத்து அவர் மக்கள் பணி மற்றும் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என டவுன் பஞ்சாயத்து பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்