தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா : மேயர் தேசியக்கொடி ஏற்றினார்;-
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா ஆணையாளர் மதுபாலன் தலைமையில் நடந்தத. மேயர் ஜெகன் பெரியசாமி 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து மாநகராட்சி பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி துப்புரவ மற்றும் டெங்கு சுகாதா பணியாளர்கள் உள்பட 40 பேருக்கு சான்றிதழை வழங்கினார். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிறப்பாக பணியாற்றிய மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன் வரவேற்புரை வழங்கினார். துணை ஆணையர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி, உதவி ஆணையர்கள் ரங்கநாதன், பாலமுருகன், சுரேஷ்குமார், கல்யாண சுந்தரம், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டூ ராஜா, பால குருசாமி, நிர்மல் ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டான்லி பாக்கியநாதன், ராஜபாண்டி, நெடுமாறன், ராஜசேகரன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், பொன்னப்பன், தேவகி, கனகராஜ், இசக்கி ராஜா, முத்துவேல், மும்தாஜ், முத்துமாரி, தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.