நாகர்கோவில் டிச 19
தமிழ்நாடு ராகுல் காந்தி பேரவை மாநில தலைவர் நாஞ்சில் ரஜினி செல்வம் அமித்ஷாவின் பாராளுமன்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
பாராளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்கட்சிகள் தொடர்ந்து அம்பேத்கருடைய பெயரை உச்சரிக்கிறார்கள் அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பதை விட கடவுளின் பெயரை உச்சரித்து இருந்தாலும் மோட்சம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மறைமுகமாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை விமர்சித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத தெய்வமான ராமன் பெயரை உச்சரிப்பதை விட கண்ணுக்குத் தெரியும் தெய்வமான அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது மேலானது ராமாயணத்தை இயற்றிய வால்முகி மோட்சம் பெற வேண்டும் என்று ராமனின் துதியை வாடிய வால்மீகிக்கு ராமனுடைய நாமம் அவன் நாவில் வரவில்லையாம் அதேபோல பாவத்தின் முழு உருவமான மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அம்பேத்கரின் நாமம் அவர்கள் நாவினால் வராது. மக்கள் மீதும் தேசத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்றுதல் கொண்டு உள்ளவர்களுக்கு டாக்டர் அம்பேத்கரின் நாமம்தான் வரும் இவர்கள் இந்திய மக்களுக்கு பாவத்தை செய்துவிட்டு புண்ணியத்தை தேடுகிறார்கள். இவ்வாறு அவர் தமது கண்டன அறிக்கைகள் கூறியுள்ளார்.