கிருஷ்ணகிரி-ஆகஸ்ட் -21-கிருஷ்ணகிரி.மாவட்டத்தில் 2000 2001 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை “ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின்” கீழ் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1,144 வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள “ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் வரப்பெற்று அவற்றில் தகுதி வாய்ந்த 666 வீடுகளை பாராமரிப்பு மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது. கடந்த ஜீலை 1 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒப்பதவாடி ஊராட்சி, காளியம்மன் கோயில் இருளர் காலணி மக்கள் பழுதடைந்த தங்களின் வீடுகளை நேரில் பார்வையிடுமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது அம்மக்களிடம் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து பார்வையிடுவதாக தெரிவித்திருந்தேன். அதனப்படையில் இன்று இருளர் காலனியில் உள்ள வீடுகளை நேரில் பார்வையிட்டப்பட்டது. தற்போது பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வரப்பெற்ற 26 வீடுகள் அதன் தன்மைக்கேற்ப பழுதும், விடுப்பட்ட வீடுகளுக்கு நிர்வாக அனுமதி பெற முன்மொழிவும் அனுப்பிட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
“ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தில், சிறு பழுது ஏற்பட்டுள்ள வீடு பராமரிப்பு பணிக்கு ரூ. 32 ஆயிரமும், சாய்வான கான்கிரிட் வீட்டிற்கு ரூ. 55 ஆயிரமும், பெரும் பழுது ஏற்பட்டுள்ள ஓட்டு வீட்டிற்கு பராமரிப்பு பணிக்கு ரூ. 70 ஆயிரமும், சாய்வான கான்கிரிட் கூரைக்கட்டிடத்திற்கு ரூ. 1 இலட்சத்து 50 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது. சுவர்களில் உள்ள சிறு விரிசல்கள், தரை பூச்சு பணிகள், சீலிங் புச்சுகள், கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது நீக்கல் செய்தல், கழிப்பறை பழுது நீக்கம் செய்தல், வெள்ள அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பணிகளை தரமாக விரைவாகவும் முடித்து பயனாளிகளுக்கு வழங்க ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தங்களுடைய குழந்தைகளை கட்டாயம் பள்ளி அனுப்ப வேண்டும். அதேப்போல குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என இருளர் இனமக்களிடம் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .கலா, .துரைசாமி, வட்டாட்சியர் .திருமுருகன், பொறியாளர் த).செல்வம், பணி மேற்பார்வையாளர் .நாகராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.