கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு உத்தரவின் பெயரில் உத்தமபாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கம்பம் எல்எப் மெயின் ரோட்டில் இருபுறமும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஆணை பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை கடை பண்பு அமைத்திருக்கும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றுவதற்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை உத்தமபாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கம்பம் எல். எப். ரோடு கேகே பட்டி பிரிவு முதல் கம்பம் நகராட்சி வரை இருபுறமும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திர மூலம் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
தேனி மாவட்ட செய்தியாளர். அசோக்குமார்.