மதுரை ஜூலை 1,
மதுரையில் 99 கடைகள் அகற்றம் – மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
மதுரை டவுன்ஹால் ரோட்டில் கூடழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகள் இன்று ஜூலை 1 ந்தேதி இந்து சமய அறநிலைத்துறை அகற்ற உள்ளது. கூடழகர் பெருமாள் கோவில் குளத்தின் கரைகளை மறைத்து கடைகள் வைத்துள்ளதால் மைய மண்டபத்தில் உள்ள கலை நயமிக்க நீராளி மண்டபத்தின் தோற்றம் வெளியே தெரியவில்லை. இதனால் கூடழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றுக்குள் கடைகளை தாங்களாகவே அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.