நாகர்கோவில் பிப் 21
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு செயலாலர் முஜீப் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கை.,
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு பயின்று வரும் மாணவ மாணவிகள், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்ற வாகனம் விபத்துக்குளாகி 2 மாணவிகள் மற்றும் 1 மாணவரும் பரிதாபமாக உயிர் இழந்ததை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.
உயிர் இழந்து மாணவ மாணவிகளின் குடும்பத்தினர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். கணிசமான அளவில் ஆறுதல் தொகை வழங்குவதோடு சிகிட்சை எடுத்து வரும் மாணவ மாணவிகளுக்கு நல்ல மருத்துவம் வழங்க வழிவகை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.