டிச. 8
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் மாநகராட்சி சார்பில் பெஞ்சல் புயல் நிவாரண பொருட்களை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடி அசைத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் எஸ். ராமமூர்த்தி ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில் 2000 குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சுந்தர்ராஜன் சுகாதார குழு தலைவர் 57 வது வார்டு மாமன்ற என்ற உறுப்பினர் நேதாஜி கவிதா மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.