நாகர்கோவில் ஜூலை 5
நாகர்கோவில் மாநகராட்சிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசாணை மூலமாக தந்திருப்பதாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் தெரிவித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-18/06/2024-ல் அரசு ஆணை வெளியிட்டதின்படி நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் மாநகராட்சியில் இடைவெளி இல்லாமல் சாலை ஓரங்களில் கடைகளும், குடியிருப்பு பகுதிகளில் சாலைகளின் அருகாமையில் குடியிருப்புகளும்,உள்ளது இதையெல்லாம் கணக்கெடுத்து 2022 ஆம் ஆண்டு ஆணையர் சரவணன் வேல் ராஜா மாநகராட்சிக்கு வந்து மாவட்ட ஆட்சியர், ஆணையர் மற்றும் நான் ஆகியோர் அமர்ந்து ஆய்வு செய்ததில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தத்தின்படி முதல்வர் கவனத்திற்கு எடுத்து 2024 ஆம் ஆண்டு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார் . அதில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும்போது முன் பகுதியில் மட்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம் விட்டு கட்டும்போது மாநகராட்சி நிர்வாகம் எந்த தடங்கலும் இன்றி அனுமதி வழங்கும். என்பதான மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மத்தியில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலேயே முதல் முதலாக இந்த அரசாணையை நாகர்கோவில் மாநகராட்சிக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றியினை மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையர், நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பத்திரிக்கை வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த அரசாணையால் தொடர் கட்டுமான வீடுகள் பயனடையும். 2023-ல் அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும், முழு சம்மதத்துடனும் தீர்மானத்தை நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைத்ததின் பயனாக தமிழ்நாடு அரசு அரசாணை அறிவித்துள்ளது.எனவே இதற்கு முன்னால் நாகர்கோவில் மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கோ கடை கட்டுவதற்கோ வரைபட ஒப்புகை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது மாநகராட்சியில் இந்த ஒப்புகை பெறுவது இந்த அரசாணையின்படி மிகவும் சுலபமாக உள்ளது. என அவர் தெரிவித்தார்.