தருமபுரி அருகே குண்டலபட்டியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் லிட்டில் ஹார்ட்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டோவருக்கான மறுவாழ்வு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது 52 பேர் இல்லத்தில் தங்கி யிருந்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், இல்ல பணியாளர்களிடம் மற்றும் தங்கியுள்ள பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் அறை, படுக்கை அறை, கழிப்பறை ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டு தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கினார் .
மேலும் தயாரிக்கப்பட்டிருந்த உணவு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் மனநல மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்து ,மாத்திரைகள் வழங்கபட வேண்டும். யோகா மற்றும் உடற்பயிற்சி அளிக்கவும், அவர்களின் உடல் உழைப்பினை ஊக்குவிப்பதற்காக காய் கறி தோட்டம் அமைக்கவும் ஆட்சியர் இல்ல பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் .இந்த ஆய்வின் போது கோட்டா ட்சியர் காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பக வள்ளி, தருமபுரி வட்டாட்சியர் மற்றும் இல்ல மேற்பார்வையாளர்கள் விஜயலட்சுமி, செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics