திருப்பத்தூர்:மே:31,
திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர்கள் ரீல்ஸ் என்னும் பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக துப்பாக்கி கத்தி போன்ற பொம்மை ஆயுதங்களை வைத்துக்கொண்டு போதை பொருட்கள் உபயோகப்படுத்துதல் போன்ற வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் பெற்றோருடன் இளைஞர்களை நேரில் அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரைகள் வழங்கி கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.
மேலும் மாவட்டத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவரின் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.