அரியலூர், ஜூன்:22
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்து அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இச்சம்பவத்தை விசாரிக்க தனி நீதமன்றம் அமைக்க வேண்டும். வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 ,25 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வழக்கறிஞர் சேதுராமன் தலைமை வகித்தார் . வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் , ராஜ்குமார், ஜெயராஜ், பாலமுருகன், மோகன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.