கன்னியாகுமரி நவ 10
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வள்ளி என்பவர் நேற்று தனது குழந்தை மற்றும் உறவினருடன் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது இரண்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் குழந்தையின் ஆடைகளை வைத்திருந்த பேக்கினை பஸ்ஸில் தவறவிட்டுவிட்டார்.
பஸ் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகம் வந்ததும் போக்குவரத்து பாதுகாவலர் மனோகரன் பேக்கினை எடுத்து பார்த்தபோது அதில்,இரண்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் துணிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அதை கன்னியாகுமரி போலீஸில் ஒப்படைத்தார்.
பின்னர் போலீசார் பெண் பக்தரை வரவழைத்து போக்குவரத்து தொழிலாளர் முன்னிலை ஒப்படைத்தனர்.