சுசீந்திரம்.அக்.29
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் ஆர் சி பரதர் தெருவை சேர்ந்தவர் சேசு அடிமை 40 இவர் கடந்த 27 ஆம் தேதி இவரது மனைவி இன்னாசியா 37 இவரை தனது வண்டியின் பின்னால் அமரவைத்து நாகர்கோவில் செல்வதற்காக பறக்கை ரோட்டில் வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருளப்பபுரம் வி என் காலணியை சார்ந்த பிரகாஷ் 20 என்பவர் அதிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் சேசு அடிமை ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சேசு அடிமையும் அவரது மனைவி இன்னாசியாவும் பலத்த காயம் அடைந்தனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேசு அடிமை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து சேசுஅடிமை மனைவி இன்னாசியா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.