[2:22 pm, 20/11/2024] +91 96777 06646: நீலகிரி
நீலகிரி மாவட்டம் முழுவதும் தாயகம் திரும்பிய தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் மத்திய அரசு நிதி நிறுவனமான ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி எல்லா மாநிலத்திலும் செயல்படுகிறது. இதன் சேவைகளை இந்தியா முழுவதும் விரிவு படுத்திய நிலையில் தமிழகத்தின் சென்னையை தலைமையி டமாகக் கொண்டு எல்லா மாவட்டத்திலும் செயல்படுகிறது. இவ்வங்கி இலங்கை, பர்மா நாடுகளுக்கு சென்று இந்திய வம்சாவளியாகி தமிழர்களாக திரும்பிய தமிழர்கள் இந்த வங்கியில் அ. வகுப்பு உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு சேவை, உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இவ் வங்கியின் நீலகிரி மாவட்ட பிரதிநிதியான பி. எஸ். குமார் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி கல்வி கடன், வீட்டு கடன், தொழில் கடன், நகை கடன்கள் வழங்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிப்போருக்கு மதிப்பெண் அடிப்படையில் வருடாந்திர ஊக்க தொகையும் மேலும் முதுகலை பொது மருத்துவம் பல் மருத்துவம் கால்நடை மருத்துவம். படிப்போருக்கு வருடாந்திர இலவச கல்வி கட்டணமாக,
[2:22 pm, 20/11/2024] +91 96777 06646: ரூ. 15,000 ,பொது ஆராய்ச்சி படிப்புகளுக்கு ரூ. 15,000, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு கால்நடை மருத்துவத்திற்கு ரூ. 12000, மற்றும் எம் பில் படிப்பு, பிசியோதெரப்பி படிப்பு, பொறியியல் படிப்பு , விவசாய படிப்பு, நர்சிங் படிப்புகளுக்கு ரூ. 9.000, 7.500 , 6.500 ,வீதமும் மற்ற இளங்கலை படிப்புகளுக்கு மூன்று வருட படிப்பு இரண்டு வருட படிப்புகளுக்கு தல ரூ. 4.500 வழங்கப்படுவதோடு டிஎன்பிசி வங்கி பயிற்சி வகுப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இது மட்டுமின்றி உறுப்பினர்களின் இருதயம், சிறுநீரக மாற்று சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு ரூ. 7.500, கண் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 10,000, புற்றுநோய் சிகிச்சைகளுக்கு ரூ.40.000, விபத்து மற்றும் இதர அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 20.000 வீதமும் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்கண்ட சலுகைகளைப் பெற தாயகம் திரும்பிய தமிழர்கள் மட்டும் நீலகிரி மாவட்ட தாலுகா வங்கி கிளைகளுக்கு சென்று தாயகம் திரும்பிய தமிழர் என்பதற்கான சான்று பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் கார்டு , பான் கார்டு, மார்பளவு புகைப்படங்களை வங்கிக்கு எடுத்துச் சென்று பதிவு செய்த பின்பு வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோத்தகிரி பகுதியில் வங்கி பேரவை பிரதிநிதியில் ஒருவரான பி. எஸ். குமார் அம்மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.