வேலூர் மாவட்டம்
ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு ஆண்டு நிறைவு விழா
வேலூர்_03
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த துத்திப்பட்டு லட்சுமணன் நகர் எல்டிஎஸ் மகாஹாலில் ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை GTWS பணி நிறைவு பெற்ற ஜி. மனோகரன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் , தலைவர் டாக்டர் கே. பரணிதரன், துணைத் தலைவர் சுபேதார் மேஜர் ஜி .மனோகரன், பொதுச் செயலாளர் சுபேதார் மேஜர் சி.எம். அருள் நம்பி ஆகியோரின் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளர் மனித உரிமை கழகம் சேர்மன் டாக்டர். சுரேஷ் கண்ணன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.உடன் ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வேத் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.