சென்னை சைதாப்பேட்டை கிழக்குப் பகுதி 169 வது வட்டக் கழகத் துணைச் செயலாளர்
சொ, முருகையனின் புதல்வி பாரதி முருகையனுக்கு சொந்தமான
ஆர்.பி.மேக் ஓவர் ஸ்டுடியோ என்ற அழகு நிலையத்தை அசோக் நகர் 7வது நிழற் சாலையில் மாவட்டக் கழகச் செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுபிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சைதை கிழக்கு பகுதி செயலாளர் மற்றும் மண்டல குழு தலைவர் இரா துரைராஜ் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் மண்டல குழுத் தலைவர் எம் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட கழக அவை தலைவர் எஸ்.குணசேகரன் மாவட்ட பிரதிநிதி சைதை எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ராஜேஷ் பச்சையப்பன், பாரதி முருகையன் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.