மதுரை மார்ச் 18,
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் மதுரை ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தமிழக முழுவதும் ப்ளூடூத் முறையில் ரேஷன் கடையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் அவ்வப்போது சிக்னல் கோளாறுகளும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை கைரேகை வைத்து பொருட்கள் கொடுப்பதிலேயே சிரமம் உள்ளது. இதனிடையே தற்போது செயல்படுத்தும் ப்ளூடூத் முறையினால் NPHH கார்டுகளுக்கு 5 முறையும் PHH கார்டுகளுக்கு 7 முறையும் கைரேகை பதிய வேண்டும் நிலை உள்ளதாகவும், ஏராளமான ரேஷன் கடைகளில் எடையாளர் இல்லாத நிலையில் ஒரே பணியாளர் இரண்டு வேலை செய்ய வேண்டும் நிலை உள்ளதாகவும், இதனால் நேர விரயம் ஏற்படும் என்பதால் பணியாளர்கள் ஒரு முறை கைரேகை வைத்தாலே அனைத்து பொருட்களும் வழங்கப்படும் விதமாக தொழில் நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என கோரியும், நுகர்பொருள் வாணிபக்கழக கடைகளிலிருந்து
ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டை எடை குறைவாக இருப்பதால் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும், கழிவறை அமைத்து தர வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் கொடுத்து விட்டு தொழில் நுட்ப கோளாறுகளை சரிசெய்து விட்டு பொட்டல முறை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.